Tree Hosa Badhukku

 Bless Nilgiris

Bless Nilgiris
Ooty, Tamil Nadu

அந்தந்துன மாத்து……………இந்துன மாத்து 

  

29.07.2010

 

நிங்க ஹகேகாரரு கோட ஹொந்தணே ஹாகிவி. அவக்கக ஒள்ளித்துன மாடிவீ.

 

 

திரிகி சிக்கிர எந்து உனிசாதே கைமாத்துக கொடிவி.

நிங்ககாயி சோமி சக்கனோகே ஹரசணே பீத்துந்தாரே.

தேவருக தன்ன மக்கவாயி இத்தாரி. நன்றி இல்லாதவக்காலெயு ஒல்லதவக்க ஆலேயு சோமி ஒள்ளித்துனவே மாடியாரவே.

 

                                                              லூக்கா 6:35

 

அடுத்த மனுஷரு நிங்கக ஏன மாடுவது எந்து நிங்க நெனெசியரியோ அதுன மாக்கேயே நிங்கவூ அவக்கக மாடிவி.

 

                                                              லூக்கா 6:31  

 

Click here for       Bible stories - Part 1

 

 

 

இயேசு சோமி நங்கவ  எல்லா பாப்பத அக்கிரம எந்த புடிசீ, தன்ன சொந்த மக்கவாயி இத்து ஒள்ளிய  கெல்ச கீது, தேவருன பக்தி யோகெ பெலவாகி இப்பதுக,    நங்கவ சிங்கர மாடுவது பேக்காயித்த தன்னவே தா, சிலுவெ மொரனோகெ சாவதுகாயி ஒப்பிசி கொட்டரு. 

   

                                                                         தீத்து 2:14

                

Click here for     Bible Stories Part 2

 

 

 

மனசு திரிகிவி. சோமின ராஜ்ஜிய நங்க சாரெ பந்துட்டடதே!

 

                                                                    மத்தேயூ 3:2

 

                                                                       

இயேசு சோமிய கிருபை !

 

ஆ கிருபைத்தா நங்கவ நோடித்து

ஆ கிருபைத்தா நங்கவ கொரிசித்து

ஆ கிருபைத்தா நங்கவ பாப்பவ மன்னிசித்து

ஆ கிருபைத்தா நங்கவ ரட்சிப்பு தந்துத்து

ஆ கிருபைத்தா நங்கவ ஒள்ளியம மாடித்து.

 

இயேசு சோமிய நெத்தரு நங்க பாப்பவ தோகி சுத்த மாடித்து

 

ஆ விசுவாச நோகெ நங்க பதிக்கினோ

ஆ விசுவாச நோகெ நடதனோ

ஆ விசுவாச நோகெ ஹரக்கெ மாடினோ

ஆ விசுவாச நோகெ ஹோராட்ட மாடினோ

ஆ விசுவாச நோகெ கெலிசினோ

ஆ விசுவாச நோகெ சத்தனோ!

 

ஒல்லாத நெனப்பு, நடப்பு, பதுக்கு, எல்லாவு பாப்பக சேதர,

விசுவாசனோகெ பராதது எல்லாவு பாப்பத்த,

அனீதி, அக்கிரம, மீறுதலு எல்லாவு பாப்பத்த,

ஓள்ளித்து மாடுவதுன அருதுண்டு மாடாதெ இப்பது  பாப்பவே

 

இயேசு சோமிய நங்க நம்புவோ.

 

ஹொச பதுக்கு சிக்கிசி ஒள்ளங்கெ பதுக்குவோ.

 

சோமி  ஹரசலீ !

 

 

                                                                   

teaPRAY FOR NILGIRIS

Jesus in Badugu

Hope For the Nilgiris

MY GRACE IS SUFFICIENT TO YOU

இயேசு சந்திக்கிறார்

Word of God Ministry

Jubilee Revival

ஏனகாகி ஈ ஹணா

ஏனகாகி ஹீ ஸொத்து

பொட்ட ஓசனே மாடு

ஏசுக ஒள்ள கொடு

(This is a site specifically dedicated to the Badugu community people living in Nilgiris and in different parts of the world)

மாயா லோகபேடா

பேய அங்கு பேடா

கோயா பாப்பா பேடா

ஆயா பதுக்கு பேடா

My Attorney

                        A story for Christmas

                                  A rescuing hug

Ship wrecked

Deck of Cards

This is a True story

How did the apostles die?

Listen to the Testimony of Thayappan

பழைய ஏற்பாடு புத்தகம்

HOLY BIBLE: EASY-TO-READ VERSION™ © 2006 by World Bible Translation Center, Inc. and used by permission.

புதிய ஏற்பாடு புத்தகம்

 

நீலகிரி ஜனவே  

.............ஓருடிவோ..........

இயேசு சோமி நினகாயி சத்த

இயேசு நிஜவாதம

 

www.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.ws

கவத்த

www.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.ws

 

தொட்டது

 

இமனஅறிவீ

 

சாது சுந்தர் சிங்

 

Saadhu_Sundersingh1980ம் ஆண்டு திபெத்திற்கு 19 வயதுள்ள இளைஞனாய் ஊழியம் செய்ய சென்றார் சாது சுந்தர் சிங் அவர்கள்.  திபெத்தில் புத்தமதமே பிரதானமாக இருந்ததால் அம்மதம் நசிந்து போய்விடக்கூடாது என்பதற்காக பிறமத மிஷனரிகள் திபெத்திற்குள் நுழைய கூடாது என்று கடுமையான சட்டமிருந்தது. இருப்பினும் துணிந்து அங்கு சென்றார். ஒரு முறை லாசா பட்டணத்திற்குள் நுழைந்தார். அம்மக்களிடையே சுவிசேஷத்திற்கு வரவேற்பில்லை. அவர்கள் சுந்தரை பிடித்து அவ்வூர் பிரதம லாமாவிடம் கொண்டு வந்தனர். அனுமதியின்று ஊருக்குள் நுழைந்த குற்றத்திற்காகவும், வேறு மதத்ததை பிரசங்கித்த குற்றத்திற்காகவும் லாமா அவருக்கு மரண தண்டனை விதித்தார்.

 

திபெத்தில் மரணதண்டனை கொடுக்கும் முறைப்படி சுந்தர் ஒரு கிணற்றிற்கு அருகில் கொண்டு செல்லபட்டார். அவரது உடைகளை உரிந்து விட்டு எலும்பு குப்பை நிறைந்த இருண்ட கிணற்றிற்குள் தூக்கி எறிந்தார்கள். விழுந்த வேகத்தில் வலது கைதோள் பட்டையில் அடிபட்டு மயக்கமுற்றார். மயக்கம் தெளிந்து எழுந்தபோது எங்கும் இருளாக இருந்தது. இவருக்குமுன் இந்த கிணற்றில் எறியப்பட்ட பலரது அழுகிய மாம்சமும் எலும்புகளும் எங்கும் நிறைந்து தாங்கமுடியாத துர்நாற்றம் வீசியது. கை வைத்த இடமெல்லாம் அழுகிய மாம்சமும் எலும்புகளுமிருந்தன. தோளில் அடிபட்ட இடம் தாங்க முடியாத வலியை கொடுத்தது. அப்பொழுது இயேசு இரட்சகர் வேதனையடைந்து உச்சரித்த வார்த்தைகள் தான் அவர் நாவிலும் வந்தன. ‘ஏன் என்னை கைவிட்டீர்?’  துர்நாற்றம் பசி,  தாகம்,  வேதனை இவைகளின் மத்தியில் சுந்தருக்கு தூக்கம் வரவில்லை.

 

மூன்றாம் நாள் இரவில் ஜெபித்து மரணத்தை எதிர்பார்த்திருந்தார். திடீரென கிணற்றின் வாயை மூடியிருந்த கதவின் பூட்டை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. பேராவலோடு அண்ணாந்து பார்த்தார். மேலேயிருந்த மனிதர் ‘கீழே விடப்படும் கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள்’  என்றார். அதன்படியே செய்தார். மேலே வந்ததும் அவர் சுந்தரை தூக்கி கிணற்றிற்கு வெளியே விட்டார். நல்ல காற்றை சுவாசித்து கர்த்தருக்கு நன்றி செலுத்தும் வேளையில் மறுபடியும் கதவு  மூடப்படும் சத்தம் கேட்டது. தனக்கு உதவிய நபருக்கு நன்றி செலுத்தும்படி திரும்பினார். என்ன ஆச்சரியம்! அங்கு யாருமில்லை. அவருடைய தோள்பட்டை வலியும் மறைந்து போனது. அப்போது தன்னை காப்பாற்றியது கர்த்தர் என அறிந்து தேவனுக்கு நன்றி செலுத்தினார்.

 

 

நிக் உஜிசி -     Nick Vujicic

 

Nick Vujisi

 

இயேசு பிரதியுத்தரமாக, “அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான் -  (யோவான் 9:3)

உங்களில் எத்தனைப் பேருக்கு நிக் உஜிசி (Nick Vujicic) என்பவரைப் பற்றித் தெரியும்? அவருக்கு சிறுவயதில் இருந்து கைகளில் காயமோ, கால்களில் அடிபட்டதோ, முட்டி தட்டி விழுந்ததோ கிடையாது. ஏனென்றால் அவருக்கு இரண்டு கைகளும் கால்களும் கிடையாது. அவர் அப்படியே பிறந்தார். நாம் அவரைக் குறித்து பரிதாபப்படுவதற்கு முன்பு அவர் சொல்வதைக் கேளுங்கள்:

'கர்த்தர் நம் வாழ்வில் அவருடைய நோக்கமும் சித்தமும் இல்லாமல் எதையும் அனுமதிப்பதில்லை. எனது 15 ஆவது வயதில் நான் யோவான் 9ம் அதிகாரத்தைப் படித்தப்பின் தேவனுக்கு என்னை முற்றிலுமாய் அர்ப்பணித்தேன். அந்தப் பிறவிக்குருடன் ஏன் அப்படிப் பிறந்தான் என்பதைக் குறித்து, இயேசுகிறிஸ்து தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான்’  என்றுக் கூறினார். இப்போது எனது வாழ்விலும் மற்றவர்களை விட என்னை நான் இருக்கிறப்பிரகாரமாக உபயோகித்து, கர்த்தர் மகிமைப் படுவதை நான் காண்கிறேன்' என்றுக் கூறுகிறார். நிக், உலகம் முழுவதிலும் சென்று இயேசுகிறிஸ்துவின் அன்பையும், இரட்சிப்பையும் இன்றும் கூறி வருகிறார்.

'என்னுடைய இந்த நிலைமையிலும் என்னால் மற்றவர்களுக்கு பிரயோஜனமாயிருக்கவும், கர்த்தரை நான் விசுவாசிக்கவும் கூடுமானால் உங்களால் நிச்சயம் உங்கள் முழு சரீரத்திலும் இருந்து கர்த்தரை கனம் பண்ணவும், அவரை எந்த சூழ்நிலையிலும் விசுவாசிக்கவும் முடியும்'  என்று மற்றவர்களை அவர் ஊக்கப்படுத்துகிறார்.

நான் அவருடைய முதல் பிரசங்கத்தைப் பார்த்தபோது மலைத்துப் போனேன். எப்படி அவர் கைகளும் கால்களும் இல்லாமல், எந்த முறுமுறுப்போ கசப்போ

முகத்தில் காட்டாமல், சந்தோஷமாய் கர்த்தருடைய செய்தியை கூடியிருக்கிற அத்தனைப் பேருக்கு முன்பாக சாதாரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்என்பதைக் கண்டபோது என்னால் கர்த்தரை துதிக்காமல் இருக்க முடியவில்லை.

இன்று எத்தனைப் பேர் இரண்டு கைகளும் கால்களும் உடையவர்களாயிருந்து, ஆராதனை நேரங்களில் கைகளைக் கட்டிக் கொண்டு, வேடிக்கை பார்க்க வருகிறவர்களைப் போன்று நின்று கர்த்தரை ஆராதனை செய்யும்போது இந்த மனிதரை கர்த்தர் உபபோகிக்கும் விதத்தைக் கண்டு வியந்துப் போனேன். நமக்கு இரண்டு கைகளும் கால்களும் கொடுத்தத்ததற்கு கர்த்தருடைய நோக்கம் ஒன்று உண்டு. அவருக்கென்று அவற்றை உபயோகிப்போமா? இரண்டு கால்களும் இரண்டு கைகளும் இல்லாத மனிதரை தேவன் உபயோகிக்கக் கூடுமானால், நம்மையும் அர்ப்பணித்தால் நம்மையும் உபயோகிக்க தேவ்ன வல்லமையுள்ளவராகவே இருக்கிறார்.

தேவன் நமக்கு கொடுத்த இரண்டு கால்களுக்காக, இரண்டு கைகளுக்காக, நம்மை முழுமையாக படைத்த அவருடைய கிருபைக்காக அவரைத் துதிப்போமா? எந்தவித குறையுமில்லாமல் நம்மைப் படைத்த தேவனை துதிப்போமா? அவருக்கென்று வாழ்வோம். அவருக்கென்று உழைப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக!

 

 

கிரஹம் ஸ்டெயின்

 

Graham stainஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு கிறஸ்தவ குடும்பம் மிஷனரிகளாக ஒரிசாவில் தங்கி ஊழியம் செய்து வந்தார்கள். அவர்கள் தங்களால் இயன்ற அளவு குஷ்டரோகிகளுக்கும், சமுதாயத்தில் துச்சமாக எண்ணப்பட்டவர்களுக்கும் நடுவில் இருந்து கிறிஸ்துவின அன்பை வெளிப்படுத்தி, அங்கு அவர்கள் மத்தியில் 34 வருடங்களாக ஊழியம் செய்து வநதனர். அவர்களுக்கு ஒரு மகளும். இரண்டு மகன்களும் இருந்தனர். அவர்கள், கிரஹம் ஸ்டெயின் மற்றும் அவரது மனைவி கிளாடிஸ் ஸ்டெயின் ஆவர்.

 

 

1999ம் வருடம் ஜனவரி மாதம் 23ம் தேதி இந்தியர்களை தலை குனிய வைத்த நாள். கிரஹம் ஸ்டெயின் தன் மகன்கள் பிலிப்பு (11 வயது), தீமோத்தேயு (6 வயது) அவர்களோடு, ஒரிசாவில் இருந்த காட்டில் தங்கள் ஊழியத்தை முடித்து,  இரவில் தங்கள் ஜீப்பில் உறங்கிக் Graham stain car.

கொண்டிருந்தபோது,  ஒரு 50 பேர் அடங்கிய அரக்கர் கூட்டம், ஒன்றுமறியாத ஆடுகளைப் போன்று உறங்கிக் கொண்டிருந்த, அந்த களங்கமில்லாத மூவர் இருந்த ஜீப்பின் மேல் கெரோசினை ஊற்றி தீக்கொளுத்தியது. ஜீப் பற்றி எரிந்துக் கொண்டிருந்தபோது, ஒரு வேளை கிரஹம் தன் பிள்ளைகளையாவது விட்டுவிடுமாறு அந்த ஓநாய் கூட்டத்திடம் மன்றாடியிருந்திருப்பார். ஆனால்  மூர்க்க வெறிக் கொண்ட அந்தக் கூட்டம் மூவரையும் துடிக்க துடிக்க உயிரோடு எரிந்ததைக் கண்டு ரசித்தது. பாவமறியாத பிள்ளைகள் துடிப்பதைக் கண்டும் அந்த அரக்கர்களின் மனம் இரங்கவில்லை. அப்போது கிரஹம், தன் பிள்ளைகளை தன் மார்போடு அணைத்தவராக, அந்நாளில் அம்மூவரும் கர்த்தருக்கென்று இரத்த சாட்சிகளாக மரித்தார்கள்.

 

கிரஹம் மிகவும் தாழ்மையுள்ளவராக, அற்புதமானவராக, மற்றவர்களுடைய குறைகளைக் கேட்டு அதைத் தீர்த்து வைப்பவராக, விசுவாசவீரனாக, தேவனுடைய மனிதனாக வாழ்ந்தவர். அவருடைய அடக்க ஆராதனையில், அநேக இந்துக்களும், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் என்று நாடே திரண்டு வந்திருந்து, அவர்களை கொன்றவர்களை வன்மையாக கண்டிக்கும் வகையில் கூடி, அவர்களை கௌரவித்தனர்.

 

அப்போது அவரது மனைவியாகிய கிளாடிஸ் ஸ்டெயின் அவர்கள் பேசிய வார்த்தைகள், அநேகருடைய கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அவர்கள் சொன்னார்கள்,  ‘எனக்கு சொல்வதற்கு ஒரே ஒரு செய்திதான் உண்டு, அது என்னவென்றால் எனக்கு யார் மேலும் கசப்பு இல்லை. யாரையும் நான் வெறுக்கவுமில்லை. எனக்கு ஒரே ஒரு பாரம்தான் உண்டு, அது, இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்களுக்காக, தங்கள் பாவங்களுக்காக  மரித்த இயேசுகிறிஸ்துவின் அன்பை உணர வேண்டும். நாம் வெறுப்பை எரித்து, கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவோம்’  என்று கூறி தன் கணவரையும், தன் இரண்டு சிறிய மகன்களையும் உயிரோடு எரித்தவர்களை ‘மன்னிக்கிறேன்’  என்று மன்னித்தார்களே அங்கு அவர்கள் ‘இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்’ என்று தங்களுடைய நற்கந்தத்தை வெளிப்படுத்தினார்கள். எந்த ஒரு தாயும் சொல்ல முடியாத வார்த்தைகளை அவர்கள் அன்று சொன்னார்கள். அவர்களுடைய 13 வயது நிரம்பிய மகள் எஸ்தரிடம், தகப்பனுடைய இந்த கொடூர மரணத்தைக் குறித்து கேட்டபோது, அவள் சொன்னாள்,  ‘தமக்காக என் தகப்பன் மரிக்கும்படி என் தேவன் அவரை தகுதியாக எண்ணினாரே அதற்காக அவரை நான் ஸ்தோத்தரிக்கிறேன்’ என்றாள். என்ன ஒரு விசுவாச அறைகூவல்!! என்ன ஒரு ஞானமுள்ள வார்த்தைகள்! பெற்றோரின் விசுவாசம் சிறுவயதிலிருந்தே அவளுடைய இருதயத்தில் வேர் கொண்டிருப்பதை அவளுடைய பேச்சின் மூலம் அறியலாம். ‘கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை’ - (எபிரேயர் 11:37-38). ஆம் இந்த உலகம் அவர்களுக்கு பாத்திரமாயிருக்கவில்லை..

 

நாம் இன்று கர்த்தருக்காக நற்கந்தம் வீசுகிறோமா? அல்லது துர் கந்தம் வீசுகிறோமா?  நம்மையே ஆராய்ந்துப் பார்ப்போம். அநேகருக்கு இந்த உலகம்

பாத்திரமாயிருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் தங்கள் நற்கந்தங்களை இந்த உலகத்தில் வீசி, கிறிஸ்துவின் அன்பை மற்றவர்கள் காணும்படியாக, ருசிக்கும்படியாக செய்தார்கள். நாமும் நம்மால் இயன்ற மட்டும், அவருக்கென்று நற்கந்தம் வீசுவோமா? கிறிஸ்து நமக்காக தன் ஜீவனைக் கொடுத்து, நற்கந்தம் வீசினாரே! அவருடைய நற்கந்தத்தை நாம் எடுத்து மற்றவர்களுக்கு பரப்ப தேவன் நமக்கு கிருபைச் செயவாராக! ஆமென்!

 

ஃபேனி கிராஸ்பி - Fanny Crosby

 

கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது. -  சங்கீதம் 98:1.

 

Fanny Crossby
ஒரு மருத்துவரின் தவறான சிகிச்சையினால்
, ஆறே வாரங்கள் நிரம்பிய ஃபேனி கிராஸ்பி (Fanny Crosby 1820-1915)  தன் இரண்டு கண்களிலும் பார்வையை இழக்க வேண்டிய பரிதாப நிலை எற்பட்டது. அதனால் அக்குழந்தை மனமடியவில்லை. சிறு வயதில் அவருடைய பாட்டி அவருக்கு அநேக காரியங்களைக் குறித்து சொல்லிக் கொடுத்தார். பூக்களை அவைகளின் மணத்தை வைத்தே என்ன பூ என்றும், மரத்தை தடவிப் பார்த்து என்ன மரம் என்று கூறும் திறமைப் படைத்தவராயிருந்தார். 

 

சிறுவயதில் வசனங்களை மனப்பாடம் செய்ய ஆரம்பித்தார். 5 ஆகமங்களையும்சங்கீதங்களையும்  நீதிமொழிகளையும், ரூத் போன்ற வேத புத்தகங்களையும்  அவர் மனனம் செய்து வைத்திருந்தார். அது அவருக்கு ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறுவதற்கு அவருக்கு பெரிதும் உதவின.

 

தனது 15ஆவது வயதில், குருடருக்கான பள்ளியில் நியூயார்க்கில் சேர்ந்து, அருமையான படிப்பை படித்து முடித்தாள். அதன் பிறகு அங்கேயே ஆசிரியையாக பணியாற்றிதனது 38ஆவது வயதில் தன்னோடு பணியாற்றின குருடரான அலெக்ஸாண்டர் (Alexander van Alstyne) என்னும் பியானோ வாசிப்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவர்கள் 44 வருடங்கள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாய் நடத்தினார்கள்.

 

சரி, யார் இந்த ஃபேனி கிராஸ்பிஅவர் தான் 8000 த்துக்கும் மேலான கிறிஸ்தவ பாடல்களை இயற்றி இசை அமைத்த மேதையாவார். அவர் எழுதிய அநேக பாடல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, சபைகளில் இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. அவர் இயற்றிய பாடல்களில் சில ‘I am Thine O Lord,   To God be the glory, Draw me nearer, Blessed Assurance’  இப்படி அருமையான பாடல்களை

அவர் இயற்றி இசையமைத்திருக்கிறார்.

 

அவர் தன் பார்வை இழந்த போதிலும், விசுவாசக் கண்களினால் கர்த்தரின் மகிமையைக் கண்டவராய், அற்புதமான பாடல்களை இயற்றியிருக்கிறார். தனது குறையை நினைத்து ஒரு போதும் அவர் முறுமுறுக்கவே இல்லை. தேவன் தமது மேலான கிருபையினால், தமது ஊழியத்திற்கு இந்த நிலைமையில் இருக்கிற என்னையும் தெரிந்தெடுத்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்என்று அவர் நன்றியோடு வாழ்ந்தார்.

 

ஒரு முறை ஒரு ஊழியர், அவர் பார்வையில்லாதவராக இருப்பதைக் குறித்து, தனது துயரத்தை வெளிப்படுத்த முற்பட்ட போது, கிராஸ்பி, அவரைத் தடுத்து,  ‘எனது பிறப்பின் போது எனது விருப்பம் எது என்று என்னைக் கேட்டிருந்தால் நான் குருடாக இருப்பதையே விரும்புவேன். ஏனெனில், நான் பரலோகத்திற்கு போகும்போது நான் காணும் முதல் முகம் எனக்காக தன் ஜீவனையே கொடுத்த என் நேசர் இயேசுவாகத்தான் இருக்கும்என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

 

ஃபேனி சுவிசேஷத்தை பாடல்கள் மூலம் பரப்புவதே தன் பணி என்று நினைத்தார். தேவ செய்திகளைவிட பாடல்கள் மூலம் அநேக ஆத்துமாக்கள் சந்திக்க முடியும் எனறு அவர் நம்பினார்.

 

பியானோ, கிட்டார், ஆர்கன் என்று அநேக இசை வாத்தியங்களை வாசிக்க அறிந்திருந்ததுடன், அழகான குரலில் பாடவும் அறிந்திருந்தார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்து, முதலாம் வருடத்திலேயே மரித்து; போனது. அவர் உயிரோடு இருந்த காலத்தில், எட்டு அமெரிக்க அதிபர்களுக்கு அவர்களுடைய ஆட்சி காலத்தில் அவர்களால் அழைக்கப்பட்டு, அவர்களோடு அமர்ந்து அவர்களுக்கு வேதத்திலிருந்து ஆலோசனைகளை கொடுக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியிருந்தது.

 

தனது குறைகளிலும் எந்த முறுமுறுப்பும் இல்லாமல், கர்த்தருக்காக வாழ்ந்துஇசைக் குயிலாக அநேக பாடல்களைப் பாடி, அநேகரை கர்த்தருக்குள் வழி நடத்திய ஃபேனி பரலோகத்திலும் கர்த்தரின் பாதத்தில் அமர்ந்திருந்து, அவரை முகமுகமாய் தரிசித்து, அவரை துதிக்கும் பாடல்களை பாடிக் கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை.

 

கர்த்தருக்காக சாதிக்க நினைப்போர் தங்கள் சரீர குறைகளை நினைத்து புலம்பிக் கொண்டிக்க மாட்டார்கள். எந்த குறையும் தடையும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது.

 

ஜான் ஹார்ப்பர் (John Harper)  

 

ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. - யோவான் 15:13.

 

டைட்டானிக் கப்பலை (Titanic Ship) கட்டிய மனிதரிடம் ஒருவர் ‘இது எவ்வளவு பாதுகாப்பானது’  என்று கேட்டதற்கு, 'அவர் ஆண்டவர் கூட இதை முழ்கடிக்க

முடியாது’ என்று ஆணித்தரமாகக் கூறினாராம்.ஆனால் அந்தக் கப்பலுக்கு என்னவாயிற்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  அதில் பயணம் செய்த 1528 மக்களில், ஆறுப் பேரே காப்பாற்றப்பட்டனர். அதை திரைப்படமாக எடுத்து, Leonardo Caprice யை ஹீரோவாக சித்தரித்திருந்தார்கள். ஆனால் அந்தக் கப்பலில் இருந்த உண்மை ஹீரோவைப் பற்றிதான் இன்றுப் பார்க்கப் போகிறோம்.

 

John Harper
ஜான் ஹார்ப்பர் (John Harper)  என்னும் அருமையான மனிதர் கிறிஸ்தவ பெற்றோருக்கு 1872-ம் ஆண்டு பிறந்தார். அவர் தனது 13ஆவது வயதில் கர்த்தரை ஏற்றுக்கொண்டு,  நான்கு வருடங்கள் கழித்து, கர்த்தரைக்குறித்து அறிவிக்க ஆரம்பித்தார். அவருக்கு திருமணமாகி, மனைவி நான்கு வருடங்களுக்குள் மரித்துப் போனார்கள். அவர்களுக்கு நீனா (Nina) என்னும் பேர் கொண்ட அருமையான பெண் குழந்தை இருந்தது.

 

ஹார்ப்பர், மூடிபிரசங்கியாரின் ஆலயத்தில் பேசுவதற்காக சிக்காகோவிற்கு (Chicago) அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக 1912 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி அவரும் அவருடைய பிள்ளை நானாவும் டைட்டானிக் கப்பலில் ஏறினார்கள். எதிர்பாராத விதமாக, பனிமலையின்மீது மோதி கப்பல் மூழ்க ஆரம்பித்த போது,  அவர் தனது மகள் நானாவை உயிர்காக்கும் (Life Boat) படகில் ஏற்றிவிட்டு, 'நான் உன்னை ஒரு நாள் காண்பேன்' என்றுச் சொல்லி, அனுப்பி வைத்தார். அவருக்கும் படகில் போக இடமிருந்தாலும், அவர் மற்ற மக்களை காக்கும் பொருட்டு அதை விட்டுவிட்டு, தன் மகளை அனுப்பிவைத்தார். பின் மரண பயத்தோடு இருந்த மக்களிடம் வந்து,   'பெண்களும், சிறுபிள்ளைகளும்,

இரட்சிக்கப்படாதவர்களும்,  முதலில் உயிர்காக்கும்படகில் ஏறுங்கள்'  என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும்போதே கப்பல் மூழ்க ஆரம்பித்தது. கப்பலில்

இருந்து பயணிகள், கீழே ஐஸ் தண்ணீர்ரில் குதிக்க ஆரம்பித்தார்கள். அதில் ஹார்ப்பரும் ஒருவராவார்.

 

அந்த நடுங்கும் குளிரிலும் ஹார்ப்பர்,  மக்கள் அந்த குளிரில் உறைந்து மரிக்குமுன்னே, அவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த ஆரம்பித்தார். அப்போது, ஒரு இளம் வாலிபன்,  அங்கிருந்த ஒரு கட்டையின் மேல் ஏறி தப்பும்படி போராடிக் கொண்டு இருப்பதைக் கண்டார். அவனிடம்,   'நீ இரட்சிக்கப்பட்டாயா? என்றுக் கேட்டார்'. அவன் இல்லை என்றுக் கூறினான். உடனே தன் மேலே இருந்த உயிர்காப்பு மிதவை ஆட (Life Jacket) எடுத்து, அந்த வாலிபனுக்கு கொடுத்து. 'என்னைவிட உனக்குத்தான் அது தேவை'   என்றுக் கூறிவிட்டு,  மற்ற பயணிகளுக்கு சத்தியத்தைச் சொல்லச் சென்றார். பின் மீண்டும் அந்த வாலிபனிடம் வந்து,  அவனுக்கு சத்தியத்தைச் சொல்லி, கிறிஸ்துவுக்குள் அவனை வழிநடத்தினார். அன்று மூழ்கின 1528 பேரில் ஆறுப் பேரே காப்பாற்றப்பட்டனர். அதில் அந்த வாலிபனும் ஒருவன்.

 

நான்கு வருடங்கள் கழித்து,  அந்த ஆறுப்பேரையும் சேர்த்து நடந்தக் கூட்டத்தில் அந்த வாலிபன் கண்ணீரோடு எழுந்து;  நின்று,  தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும்,  ஹார்ப்பர் எப்படி அந்த பனிநீரிலும், மற்றவர்களுக்கு சுவிசேஷத்தைக் கூறினார் என்பதையும், அவர் நீந்த முடியாமல் கடைசியில் பலவீனமடைந்து,   தண்ணீரில் மூழ்கும் நேரம் வந்தபோது,  கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசியுங்கள்,  அப்போது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்று கூறிக் கொண்டே மூழ்கியதையும் நினைவு கூர்ந்து கதறினான். மற்றவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற எப்படியாவது உயிர் காப்பாற்றும் படகை பிடிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த வேளையில் தனக்கு கிடைத்த வாய்ப்பையும் மற்றவர்களுக்கு கொடுத்து,  தனது உயிரையும் கொடுத்த அற்புத மனிதரை ஹாலிவுட் படமெடுக்காமலிருக்கலாம்,  ஆனால்,  பரலோகத்தில் அவருக்கு நிச்சயம் பதில் செய்ப்படும்.

 

ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக்

கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு

ஒருவரிடத்திலுமில்லை. ஆமென். நிச்சயமாகவே

ஹார்ப்பர் ஒரு அற்புத ஹீரோதான்.

 

இயேசுகிறிஸ்துவும் நம்மில் அன்பு கூர்ந்து, தமது ஜீவனையே நமக்காக கொடுத்தாரே,  தேவனுடைய குமாரனாயிருந்தும், நமக்காக தம் ஜீவனைக் கொடுத்த, தம் மாசில்லாத இரத்தத்தை சிந்தி,  நமக்கு இரட்சிப்பை இலவசமாக கொடுத்திருக்கிறாரே அவர்,  சூப்பர் ஹீரோதான். அவரை விசுவாசித்து,  அவருக்காக எந்த தியாகமும் செய்யும் ஒவ்வொருவரும் ஒரு ஹீரோக்கள்தான்.

 

 

டா வின்சி  Da Vinci - The Last Supper

 

Lord supper
இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி; உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார். அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள்.  அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனானயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன் பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். அந்தத்

துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி;  நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார். - (யோவான் 13: 21-27) .

 

இந்த வசனங்கள் நம் அனைவரும் நன்கு அறிந்த ஒரு பகுதியாகும். கடைசி இராப்போஜனம் என்றும் ஆங்கிலத்தில் The Last Supper என்றும் அழைக்கப்படும்

இந்தப்பகுதியை விதவிதமான சித்திரங்களாக வரைந்து எல்லா இடங்களிலும் வைத்திருக்கிறார்கள்.  இதை வைத்து Da Vinci code  என்ற திரைப்படத்தை உருவாக்கி, பெரிய அளவு சம்பாதித்து, சத்துரு மகிழ்ந்தான். சரி,  இந்த சித்திரத்தின் பிண்ணனியைப் பார்த்தால் நம்மால் நம்ப முடியாத காரியங்கள் நடைபெற்றுள்ளன.

 

The Last Supper  என்னும் சித்திரத்தை அல்லது ஓவியத்தை  உண்டாக்கியவர் Leonardo Da Vinci  என்னும் இத்தாலிய தலைச்சிறந்த ஓவியராவார். அந்த ஓவியத்தை அவர் செய்து முடிக்க 7 வருடங்களாயின. இயேசுகிறிஸ்துவும் அவரது 12 சீஷர்களும் உண்மையான மனிதர்களை மாடலாக வைத்து வரையப்பட்டனர்.

 

முதலாவது கிறிஸ்துவின் படத்தை வரைவதற்கு ஒரு மாடல் தேவைப்பட்டார்.  நூற்றுக்கணக்கான வாலிபர்கள் இதற்கென்று ஜாக்கிரதையாக தேடப்பட்டார்கள்.  அமைதியும் அன்பும் அழகும் நிறைந்த முகமாய், பாவத்தின் கறைகளினால் சேதப்பட்டிருக்காமல், ஒரு களங்கமில்லாத ஒரு முகத்தைத் தேடினார்கள். கடைசியில் அநேக வாரங்களுக்குப் பிறகு, 19 வயது நிரம்பிய ஒரு வாலிபனை கண்டுபிடித்தார்கள். அவனை வைத்து வின்சி,  ஆறு மாதங்கள் விடாமல் தன் முழு ஆற்றலையும் செலுத்தி,  இயேசுகிறிஸ்துவின் படத்தை வரைந்து முடித்தார்.

 

அதைத் தொடர்ந்து, அடுத்த ஆறு வருடங்கள், ஜாக்கிரதையாக மற்ற 11 சீஷர்களை தேர்ந்தெடுத்து,  அவர்களையும் வரைந்து முடித்தார்.  அவர்களின் மத்தியில் ஒரு இடத்தை யூதாஸ்காரியோத்திற்காக விட்டு வைத்து, மற்ற சீஷர்களை வரைந்து முடித்தார்.  இப்போது யூதாஸ்காரியோத்தை வரைந்தால் அந்தப் படம் முடிவடைந்து விடும்.

 

இப்போது,  யூதாஸ்காரியோத்தைத் தேடும் படலம் தொடங்கியது.  டாவின்சி, இப்போது, மிகவும் கடுமையான, பாவமும் மாய்மாலமும் நிறைந்த, தன் அன்பு நண்பனை மறுதலித்து,  காட்டிக் கொடுத்த, கொடூரமான முகத்திற்கான மாடலைத் தேடினார்.  அநேக வாரங்கள் தேடிய பிறகு, ரோம அரசின் பாதாள சிறையில் அவர் வேண்டியபடி, ஒரு மனிதன் கொலையும் குற்றங்களும் செய்து வாழ்நாள் முழுதும் சிறையில் இருக்கும்படி தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக செய்தி வந்தது.

 

உடனே அவர் அங்கு புறப்பட்டுச்சென்று அந்த மனிதனை, சூரிய வெளிச்சத்தில் பார்த்தபோது, அவன் முடிகள் சடை பிடித்ததாய் கொடுமை நிறைந்த முகத்தை அங்கு கண்டார். கடைசியில் அவருக்கு அவர் விரும்பியபடி யூதாஸ்காரியோத்திற்கு மாடலாக தகுதியான மனிதன் கிடைத்து,  அந்த நாட்டு அரசனிடமிருந்து விசேஷித்த அனுமதிப் பெற்று,  அந்த மனிதனை அவர் தன் அறைக்கு கொண்டு வந்து அவர் வரைய ஆரம்பித்தார்.

 

கடைசியாக,  வரைந்து முடித்தப்பின் காவல்காரரிடம், 'சரி வரைந்து முடித்தாயிற்று.  இவனை மீண்டும் சிறைக்கு கொண்டு போங்கள்'  என்று கூறினார்.   அப்படி அந்தக் காவலர் அவனை சங்கிலிகளால் பிணைத்து கொண்டுப் போக முற்படும் போது அந்த மனிதன் திமிறி,   டா வின்சியிடம் ஓடி வந்து,   ‘ஐயா என்னைத் தெரியவில்லையா?’  என்றுக் கேட்டான். அதற்கு டா வின்சி,  ‘நான் உன்னைப் பார்த்ததே இல்லை, உன்னை அந்தச் சிறையில் தான் முதலில் பார்த்தேன்’  என்றுக் கூறினார். அப்போது அந்த மனிதன் கண்களில் கண்ணீர் வழிய,  “ஐயா என்னை நன்றாக பாருங்கள். நான் தான் நீங்கள் ஏழு வருடங்களுக்கு முன் கிறிஸ்துவுக்கு மாடலாக நின்ற மனிதன்” என்றுக் கூறினான். டா வின்சி அப்படியே வாயடைத்து நின்றார்.

 

ஏழு வருடங்களுக்கு முன் களங்கமில்லாத பால் வடியும் முகத்துடன்,  கிறிஸ்துவுக்கு மாடலாக நின்ற அதே மனிதன், பாவம் அவன் உள்ளத்தில் வந்ததால், கொலையும் குற்றமும் செய்து,  உலக சரித்திரத்திலேயே மோசமான ஒரு மனிதனுக்கு ஒப்பாக மாறிவிட்டான்.  பாவம் வரும்போது எத்தனை மாறுதல்கள்!  பாவம் நம் முகச்சாயலை மாத்திரமல்ல,   நம் வாழ்வையே அழித்துப் போடுகிறது. பாவத்திற்கு எதிர்த்து போராடுவோம். பாவம் செய்யாதபடி நம்மைக் காத்துக் கொள்வோம். சாத்தானின் முகச் சாயலும், அவனுடைய எந்த காரியமும் நம் வாழ்க்கையில் காணப்பட வேண்டாம்.

 

பால்வடியும் முகம் என்று கிறிஸ்துவுக்காக மாடலைஅவர்கள் தேர்ந்தெடுத்தாலும், அவன் இருதயம் எத்தனை கறுப்பாக இருந்திருக்றது?  “மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்றார்.  (1சாமுவேல். 16:7).

நம் தேவன் நம் இருதயத்தைப் பார்க்கிற தேவனாயிருக்கிறார். நம் இருதயத்தில் கறையில்லாதவர்களாக காணப்படுவோம். பரிசுத்த வாழ்க்கை வாழ்வோம். அப்படிப்பட்டவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!

 

 

ஹொசபதுக்கு

 

 

என்ன ஜனவே பெட்டவ நிங்கக நா ஒப்பிசிபுட்டெ

 

 

www.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.wswww.bigoo.ws

 

All the information on these pages is free for the purpose of edification only. You may share out the information free but do not sell or place the content of this page on any other website or blog without obtaining written permission requested by writing to the e-mail address mentioned at the bottom of the page. If you have any questions about the use of these materials please e-mail .

 

Bless Nilgiris
Ooty, Tamil Nadu